கதைகள் சொல்லி தமிழை வளர்க்கலாம்

கதைகள் சொல்லி தமிழை வளர்க்கலாம்

1 mins read

உயிர்­அ­றி­வி­ய­லா­ளர் திரு இள­வ­ழ­கன் முரு­க­னுக்கு, நாட­கக் கர்த்­தா­வாக மற்­றொரு முக்­கி­ய பரி­மா­ண­மும் உள்­ளது. இதற்கு வித்­திட்­டது, அவர் தமது கூட்­டுக்­கு­டும்­பத்­தில் கேட்டு வளர்ந்த தமிழ்க் கதை­களே.

பிள்­ளை­க­ளுக்­கும் இந்த அனு­ப­வத்தை வழங்­கும் ஆர்­வத்­தில் கதை சொல்­லு­தலை வலி­யு­றுத்தி வரு­கி­றார் திரு இள­வ­ழ­கன்.

திருக்­கு­ற­ளின் முதல் குறளை ஒட்­டியே இரு மகன்­களுக்­கும் பெயர் சூட்­டி­யுள்­ளார் திரு இள­வ­ழ­கன். அக­ரன் இளங்­க­திர், ஆதி­ரன் இனி­யன் என்ற அவ­ரின் மகன்­க­ளி­டத்­தில் தமி­ழைப் புகட்­டு­வதை ஒரு முக்­கி­யக் கட­மை­யாக இவர் கரு­து­கி­றார்.

"நமது பெயரே நமது வாழ்­நாள் அடை­யா­ளம். பள்­ளிப்­ப­ரு­வத்­தி­லி­ருந்தே எனது பெய­ரைப் பல­ரும் ரசித்­துப் பாராட்­டு­வது உண்டு.

"அவ்­வாறே பொருள்­நி­றைந்த பெயரை என் மகன்­க­ளுக்­குச் சூட்ட விரும்­பி­னேன்," என்­றார் திரு இள­வ­ழ­கன், 42 (படம்).