குடமுழுக்கு வேலைகள் மும்முரம்

தேங்க் ரோடு அருள்­மிகு தெண்­ட­யு­த­பாணி கோயில் திருக்­கு­ட­முழுக்குப் பெருவிழா வரும் வியாழக்­கி­ழமை (ஜூன் 1) நடை­பெற உள்­ளது. 2014ஆம் ஆண்டு தேசிய மர­பு­டை­மைச் சின்­ன­மாக இக்கோயில் அறி­விக்­கப்­பட்ட பிறகு நடத்­தப்­படும் முதல் குட­முழுக்கு இது. மேலும், இக்­கோயி­லின் எட்­டா­வது குட­முழுக்­கு இது.

பழனி, திருச்­செந்­தூர் முத­லிய அறு­படை வீடுகளிலிருந்தும் திரு­நள்­ளாறு, பிள்­ளை­யார்­பட்டி உள்­ளிட்ட ஊர்­க­ளி­லி­ருந்­தும் 46 புரோ­கி­தர்­களும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 10 புரோ­கி­தர்­களும் திருக்­குட நன்­னீ­ராட்டு விழா­வில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

‘சிவ­ஸ்ரீ அண்ணா’ என பிர­ப­ல­மாக அழைக்­கப்­படும் பிச்சை குருக்­கள் இந்­தக் குட­மு­ழுக்கு விழா­வின் ‘சர்­வ­சா­த­கம்’ எனப்­படும் தலை­மைப் பொறுப்­பில் செயல்­ப­டு­வார்.

பத்து காலங்­களில் நடை­பெறும் இக்­கு­ட­முழுக்­கின் முதற்­கட்ட பூசை­க­ளாக மகா கண­பதி ஹோமம், நவக்­கி­ரக ஹோமம், ஸ்கந்த ஹோமம் முத­லி­யவை மே 23, 24 தேதி­களில் நடை­பெற்­றன. பத்து கால யாக­சாலை பூசைக்கு முன்பு 48 நாள்க­ளுக்கு யந்­திர பூசை­கள் நடை­பெற்­றன. மே 30ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை சந்­நி­தி­க­ளி­லுள்ள திரு­வு­ரு­வங்­க­ளுக்கு எண்­ணெய் சாற்­றும் நிகழ்­வுக்கு பக்­தர்­கள் அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

திருக்­குட நன்­னீ­ராட்டு விழா­விற்கு பிர­த­மர் லீ சியன் லூங் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொள்­ள­வி­ருப்­ப­தாக கோயில் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. அவ­ரு­டன் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், கலா­சார, சமூக இளை­யர்­துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா ஆகி­யோ­ரும் வரு­கை­பு­ரி­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பன்­னி­ரண்டு மங்­கல வாத்­தி­யக்­க­லை­ஞர்­களும் புகழ்­பெற்ற செவ்­வி­சைப் பாட­கர் சீர்­காழி சிவ­சி­தம்­ப­ர­மும் இணைந்து இறை தரி­ச­னத்­திற்­கா­கக் காத்­தி­ருக்­கும் பக்­தர்­க­ளுக்கு இசை­மழை பொழி­ய­வுள்­ள­னர்.

கோயி­லின் உள்­பு­றத்­திற்­குள் முரு­கப்­பெ­ரு­மா­னின் அறு­ப­டை­வீட்டு சிற்­பங்­கள், சிவ­பெ­ரு­மா­னின் நவ­தாண்­ட­வச் சிற்­பங்­கள் ஆகி­யவை தூண்­க­ளி­லும் சுவர்­களி­லும் இடம்­பெ­று­கின்­றன. இந்­தி­யா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட 15 சிற்­பி­கள் கடந்த ஓராண்­ டாக இச்­சிற்­பங்­கள் அனைத்­தை­யும் பழு­து­பார்த்து வண்­ணம் பூசி புதுப்­பொ­லி­வைச் சேர்த்­துள்­ள­னர். தமி­ழ­கத்­தின் சோழர்கால சிற்­பக்­கலை பின்­பற்­றப்­ப­டு­வ­தா­கத் தலைமை சிற்பி நாக­ரா­ஜன் ஸ்தபதி, 72, தமிழ் முர­சி­டம் தெரிவித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!