வரலாற்றின் கையைப் பிடித்து வளர்ந்த கோயில்

சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்த நக­ரத்­தார் சமூ­கத்­தி­ன­ரால் தெண்­டா­யு­த­பாணி திருக்­கோ­யில் 1859ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அதற்கு முன்­னர் சென்ட்­ரல் பார்க் என அழைக்­கப்­படும் இடத்­தில் அச்­ச­மூ­கத்­தி­னர் புனித வேல் ஒன்றை நட்டு வைத்து வழி­பட்டு வந்­த­னர்.

அர­ச­ருக்கு நிக­ரான செல்­வத்­தைச் சேர்த்­தா­லும் ஆண்­டி­யைப் போல் மன­த­ள­வில் எளி­மை­யு­டன் வாழும் பண்­பைப் போற்­றவே தெண்­டா­யு­த­பாணி எனும் ஆண்­டி கோ­லத்­தில் முரு­கன் இங்கு அருள்­பா­லிக்­கி­றார்.

முத­லில் கட்­டப்­பட்ட கோயில், நக­ரத்­தார் சமூகத்தின் வீடு­போன்ற தோற்­றத்­தைக் கொண்­டி­ருந்­தது. அதன் நுழை­வா­யிலில் இரண்டு திண்­ணை­கள் இருந்­தன.

இக்­கோ­யில் நக­ரத்­தார் சமூ­கத்­தி­ன­ரின் மையப்­புள்­ளி­யா­கத் திகழ்ந்­தது. 1928ஆம் ஆண்டு இந்­தக் கோயி­லின் வளா­கத்­தில் நாட்­டுக்­கோட்டை செட்­டி­யார் வர்த்­தக தொழிற்­சபை அமைக்­கப்­பட்­டது.

1970கள் வரை சிறி­தாக இருந்த கோயி­லுக்கு 75 அடி ராஜ­கோ­பு­ரம் கட்­டப்­பட்­டது. கோயிலின் உட்­பு­றத்­தி­லும் வெளிப்­பு­றத்­தி­லும் கட­வுள் திரு­வு­ரு­வச் சிற்­பங்­களும் 48 அலங்­காரக் கண்­ணாடி சன்­னல்­களும் அமைக்­கப்­பட்­டன.

பக்­தர்­க­ளுக்கு உணவு பரி­மா­றப்­படும் ‘கார்த்­தி­கைக் கட்டு’ என்ற பகுதி, பிற்­கா­லத்­தில் சமை­ய­லுக்­கான இட­மாக மாற்­றப்­பட்­டது.

புகழ்­பெற்ற பழனி முரு­கன் கோயி­லின் வழி­பாட்டு மரபை அருள்­மிகு தெண்­டாயுதபாணி கோயில் பின்­பற்­று­கிறது. திரு­வு­ரு­வங்­க­ளுக்கு சிவாச்­சா­ரி­யார்­களும் தெண்­டா­யு­த­பா­ணி­யின் வேலுக்கு சைவ சம­யத்­தைச் சார்ந்த பண்­டா­ர­மும் பூசை செய்­வது வழக்­கம்.

பண்­டா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வழக்­கம் இங்கு தொன்­று­தொட்டு உள்­ளது. ஆண்­டு­தோ­றும் ஆறு முக்­கிய திரு­வி­ழாக்­கள் இக்­கோ­யி­லில் நடை­பெ­று­கின்­றன. தைப்­பூ­சம், மீனாட்சி லட்­சார்ச்­சனை, இரா­மா­யணம் வாசித்­தல், நவ­ராத்­திரி, கந்த சஷ்டி விர­தம், திருக்­கார்த்­திகை ஆகி­யன அவை.

சிங்­கப்­பூர் தெண்­டா­யு­த­பாணி முரு­க­னைப் பற்றி கவி­ஞர்­கள் பலர் பாடல் இயற்­றி­யுள்­ள­னர்.

1887ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம் சதா­சிவ பண்­டி­தர் என்­ப­வர் இயற்றி வெளி­யிட்ட சிங்கை நக­ரந்­தாதி, சித்­தி­ரக்­க­வி­கள் எனும் நூல்­கள் அவற்­றுள் பழ­மை­யா­னவை. மலே­சிய சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யத்­தின் முன்­னோடி நூல்­கள் அவை என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

1907ஆம் ஆண்டு சிங்­கை­ந­கர் சிங்­கார வடி­வே­லர் காவடிச் சிந்து என்ற பாடல் ஆர்.எம்.ஆர். ராம­நா­த­னால் எழு­தப்­பட்­டது.

இப்படி வரலாற்றின் கையைப் பிடித்து வளர்ந்த தெண்டாயுதபாணி கோயில், எட்டாவது குடமுழுக்கை எட்டிப் பிடித்திருப்பது பெரும் சிறப்பாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!