மருத்துவ விடுப்பும் காப்புறுதியும்

முழு­நேர ஊழி­யர்­கள் தொடர்ந்து ஒரே நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும்­போது மருத்­து­வச் சலு­கை­கள், மருத்­துவ விடுப்பு, சம்­பள உயர்வு, காப்­பு­றுதி ஆகி­ய­வற்­றைப் பெறு­கின்­ற­னர். ஆயி­னும் அதே வேலை­யி­டத்­தில் இருக்­கும்­வ­ரை­தான் ஒரு­வ­ருக்கு வேலை­யி­டத்­தில் மருத்­து­வச் சலு­கை­கள் தரப்­ப­டு­கின்­றன.

நடுத்­தர வயதை எட்­டிய பணி­யா­ளர்­கள் வேறு வேலைக்கு மாறும்­போது புதிய வேலை­யில் காப்­பு­றுதி பயன்­க­ளைப் பெறு­வது கடி­ன­மா­கிறது.

தற்­போ­தைய சூழ­லில் தொழில்­து­றை­யில் மாற்­றங்­கள் ஏரா­ளம். நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சி­யை­யும் வீழ்ச்­சி­யை­யும் ஊகிக்­க­மு­டி­யாத நிலை­யில், பல்­வேறு சலு­கை­க­ளைத் தொடர்ந்து பெறக்­கூ­டிய ஒரு வாழ்க்­கைத் தொழிலை நம்­பி­யி­ருப்­பது எல்­லா­ருக்­கும் சாத்­தி­ய­மில்லை.

குறை­வான ஊழி­யர்­க­ளைக் கொண்ட நிறு­வ­னங்­களில் தனித்­த­னி­யாக காப்­பு­று­திக்­கான தகுதி மதிப்­பீடு செய்­யப்­ப­டும்­போது நீண்­ட­கால நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் காப்­பு­றுதி மறுக்­கப்­படும் வாய்ப்பு இருப்­ப­தா­கக் காப்­பு­றுதி முக­வர் கும­ரன் மணி தெரி­வித்­தார்.

“ஒரு­சில நிறு­வ­னங்­க­ளுக்­குக் குழு காப்­பு­றுதி இல்லை. மருத்­து­வ­ம­னை­யில் சேர்ந்து சிகிச்சை பெறு­வ­தற்­கான தனிப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டங்­களை வாங்­கும்­படி இத்­த­கைய வேலை­யி­டங்­கள் அவற்­றின் ஊழி­யர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறு­கின்­றன,” என்­றார் அவர்.

“கடு­மை­யான மருத்­துவ பாதிப்பு உள்ள ஊழி­யர்­கள், தங்­க­ளது முன்­னாள் வேலை இட மருத்­து­வக் காப்­பு­றுதி பலன்­களைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அனு­மதி தந்­தால் பேரு­த­வி­யாக இருக்­கும்,” என்று அவர் சொன்னார்.

இத்­த­கைய மாற்­றத்தை வேலை­யி­டங்­கள் ஆத­ரிக்­குமா என்­பது கேள்­விக்­கு­றியே என்­றார் நிதிச்­சேவை இயக்­கு­நர் எம்.பி. செல்­வம்.

ஒரு வேலை­யி­டத்­தில் பெறப்­படும் காப்­பு­றுதி ஆதா­யங்­களை அப்­ப­டியே அடுத்த வேலை­யி­டத்­திற்கு மாற்ற முடி­யுமா என்­பது குறித்த விவா­தம் காப்­பு­று­தித் துறை­யில் நடை­பெற்று வந்­தா­லும் இது­கு­றித்த ஒரு முடிவு இது­வரை எட்­டப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­னார்.

சம்­ப­ளத்­து­டன் கூடிய விடுப்­புக்­கான உரிமை ஊழி­யர் பாது­காப்­பின் மற்­றோர் அம்­ச­மா­கும். சுய­தொ­ழில் செய்­வோ­ரால் இல­வச மருத்­துவ விடுப்பு எடுக்க முடி­யாது. அவர்­கள் வேலைக்­குச் செல்­லாத நாள்­க­ளி­லும் வாடகை கட்­ட­வேண்­டும்.

நியூட்­டன் உணவு நிலை­யத்­தில் ஆறு மாதங்­க­ளுக்கு முன்­ன­தாக ‘மீ கோரெங்’ கடை­யைத் திறந்­தார் ரங்­கையா, 39. அவர் அந்­தக் கடை­யைத் தனி­யாக நடத்­து­கி­றார்.

உடல்­ந­லம் சரி­யில்­லாத நாள்­களில் கடையை அவர் மூட வேண்­டி­வ­ரும். “ஆனால் வாடகை, எரி­வா­யுக் கட்­ட­ணம், மின்­சா­ரக் கட்­ட­ணம் போன்ற செல­வு­க­ளைத் தொடர்ந்து செலுத்த வேண்­டும்.

“கடை­யைப் புதி­தாக ஆரம்­பித்­துள்ள நிலை­யில் நான் நோய்­வாய்ப்­பட்­டால் விளைவு மோச­மாக இருக்­கும்,” என்­றார் இரண்டு இளம் பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான ரங்­கையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!