சில மணிநேரத்தில் உலகக் கிண்ணம் 2022 இறுதியாட்டம்

சில மணிநேரத்தில் உலகக் கிண்ணம் 2022 இறுதியாட்டம்

1 mins read

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பல திருப்பங்கள் இருந்தபோதும் இறுதியாட்டத்திற்கு முன்னேறிய அர்ஜென்டினாவும் பிரான்சும் அதிகம் கவனிக்கப்பட்ட அணிகளே. உலகளவில் லயனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்குத்தான் அமோக ஆதரவு இருக்கிறது. அதை பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோமும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்றைய ஆட்டமே தனது கடைசி உலகக் கிண்ண ஆட்டம் என்று மெஸ்ஸி அறிவித்திருந்தார். கடைசி ஆட்டத்தில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வெல்வது மெஸ்ஸியின் திறமைக்குக் கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாக இருக்கும். காற்பந்தில் உலகக் கிண்ணத்தை மட்டும்தான் வெல்லவில்லை மெஸ்ஸி.

அதே வேளையில், இப்போட்டியில் ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம் ஆகியவற்றை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி ஆப்பிரிக்க கண்டத்திற்குப் பெருமை தேடித் தந்தது மொரோக்கோ. ஜெர்மனி, ஸ்பெயின் இரண்டையும் வென்று அசத்தியது ஜப்பான். காலிறுதிச் சுற்றில் பெனால்டிகளின் மூலம் பிரேசிலை வெளியேற்றியது குரோவேஷியா. காயமுற்ற பல முக்கியமான விளையாட்டாளர்கள் இல்லாத பிரான்ஸ் கம்பீரமாக மீண்டும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதியாட்டத்திலும் திருப்பங்கள் இருக்குமா?

இன்றிரவு 11 மணிக்கு மீடியாகார்ப் ஒளிவழி ஐந்தில் இறுதியாட்டம் நேரடியாக ஒளிபரப்பாகும்.

உலகக் கிண்ண இறுதியாட்டம் பற்றிய 'முரசு காப்பிக் கடை' சிறப்பு வலையொளி: https://www.youtube.com/watch?v=DqRbWTlrn74

Watch on YouTube