உலக மல்யுத்தக் கேளிக்கைப் போட்டியில் (டபுள்யூடபுள்யூஇ) சேர்ந்துள்ள முதல் சிங்கப்பூரரான ஷான் டானுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி கிட்டியது.
டாண்டே சென் எனும் பெயரில் சண்டையிடும் 25 வயது டான், டிரெய் பேக்ஸ்டர் என்பவரை ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் தோற்கடித்தார்.
ஆசியாவைச் சேர்ந்த மற்றவர்களுடன் சேர்ந்து அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டபுள்யூடபுள்யூஈ பர்ஃபார்மன்ஸ் சென்டரில் கடந்த சில மாதங்களாக டான் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
ஈராண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷங்ஹாய் நகரில் டபுள்யூடபுள்யூஇ போட்டி ஒன்றில் பங்கேற்று டான் தமது ஆற்றலைச் சோதித்துப் பார்த்தார்.
2012ல் 'எஸ்ஜி புரோ ரெஸ்ட்லிங்' எனும் மல்யுத்தப் பள்ளி ஒன்றில் டான் சேர்ந்தார்.

