டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்; ரிஷப் பன்ட் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்; ரிஷப் பன்ட் சாதனை

1 mins read
3d080f57-951a-4fab-90d0-1e89c0a4b8d9
தமது 51வது டெஸ்ட் போட்டியிலேயே 100 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ரிஷப் பன்ட். - படம்: ஏஎப்பி
Google News Preferred Icon

காலி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான ரிஷப் பன்ட், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நூறு சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக காலியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது அவருக்கு 51வது டெஸ்ட் போட்டி.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் நூறு சிக்சர்களை அடித்த நான்காவது ஆட்டக்காரர் என்ற பெருமையையும் பெற்றார் பன்ட்.

இதற்குமுன் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (138), நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் (107), ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (100) ஆகியோர் அந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

இந்திய வீரர்களைப் பொறுத்தமட்டில், வீரேந்தர் சேவாக்கும் ரோகித் சர்மாவும் ஆளுக்கு 91 சிக்சர்களை விளாசியுள்ளனர்.

இலங்கை அணிக்கெதிராக ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதன்பின் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 193 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக பன்ட் 66 ஓட்டங்களை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, 372 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை விளையாடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்