தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

150 சிக்சர்: சூர்யகுமார் அதிவேகம்

1 mins read
5f3e83fb-3f4f-4965-aa1e-92c71fb2f4eb
அனைத்துலக டி20 போட்டிகளில் 150 சிக்சர்களை அடித்த ஐந்தாவது வீரரான இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ். - படம்: இபிஏ
multi-img1 of 2

கேன்பரா: அனைத்துலக டி20 கிரிக்கெட் விளையாட்டில் அதிவேகமாக 150 சிக்சர்களை விளாசியவர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக புதன்கிழமை (அக்டோபர் 29) நடந்த முதலாவது டி20 போட்டியில் அவர் இச்சாதனையைப் படைத்தார்.

இந்த மைல்கல்லை எட்ட சூர்யகுமாருக்கு 86 இன்னிங்ஸ்களும் 1,649 பந்துகளுமே தேவைப்பட்டன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) முகம்மது வசீம் 66 இன்னிங்ஸ், 1,543 பந்துகளில் 150 சிக்சர்களை அடித்துச் சாதனை படைத்தார். ஆயினும், யுஏஇ அனைத்துலகக் கிரிக்கெட் மன்றத்தின் இணை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தோர் பட்டியலில் 205 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா. வசீம் (187), மார்ட்டின் கப்டில் (173), ஜோஸ் பட்லர் (172), சூர்யகுமார் (150) ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர்.

இதனிடையே, ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் மோதிய முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதலில் பந்தடித்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இரண்டாவது போட்டி இம்மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்