சவால் விடுக்கும் ரிக்கார்டோ

சவால் விடுக்கும் ரிக்கார்டோ

2 mins read
3469d65d-7d33-401c-9eaf-b28c0321b7cd
-

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் இவ்வாண்டிற்கான ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை வெல்ல மெர்சிடிஸ் குழுவின் லூவிஸ் ஹேமில்டனுக்கும் ஃபெராரி குழு வின் செபாஸ்டியன் வெட்டலுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்வார இறுதியில் நடக்க இருக்கும் சிங்கப்பூர் கிராண்ட் பிரீயையும் சேர்த்து இன்னும் ஏழு பந்தயங்களே எஞ்சியுள்ள நிலை யில், வெட்டலைவிட 30 புள்ளிகள் அதிகம் பெற்று 256 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் ஹேமில்டன்.

சென்ற ஆண்டில் இங்கு வெற் றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய ஹேமில்டன் அதைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறார். கடந்த ஈராண்டுகளாகக் கைநழுவிய பட்டத்தை இம்முறை தனதாக்கிக் கொள்வதில் வெட்டலும் தீவிரமாக இருக்கிறார்.

இந்த நிலையில், இவ்விருவருக் கும் கடும் சவால் அளிக்கக் காத் திருக்கிறார் ரெட் புல் குழுவின் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிக்கார்டோ (படம்). "சாலைகளில் நடத்தப்படும் பந்தயங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். சாலையோரமாகவும் சுவரை ஒட்டியும் கார் ஓட்டுவது ஒரு வித்தியாசமான அனுபவம். "உண்மையான இரவு நேரப் பந்தயம் இதுதான்.

பரபரப்பான பந்தய அட்டவணையைக் கொண் டது. ஆனாலும், பந்தயத் தடத்தில் இரவு நேரத்தில் காரோட்டிவிட்டு, அதிகாலை நான்கு, ஐந்து மணிக்குத் தூங்கச் செல்வது அலாதியான இன்பம்தான். "முந்தைய ஆண்டுகளில் இங்கு நடந்த பந்தயங்களில் எனது செயல்பாடு வலுவானதாக இருந்தது. கடந்த மூன்றாண்டு களில் தொடர்ச்சியாக இரண்டா வதாக வந்துள்ளேன். ஆகையால், வெற்றிக் கனியைப் பறிக்க இதுவே சிறந்த தருணம் என நினைக் கிறேன்," என்றார் ரிக்கார்டோ. ஆயினும், ஃபெராரியின் வேகத் திற்கு ஈடுகொடுப்பது சற்று சிரமம் தான் என்பதையும் ரிக்கார்டோ ஒப்புக்கொண்டார்.