ஓய்வுபெற்றார் சர்தார் சிங்

ஓய்வுபெற்றார் சர்தார் சிங்

1 mins read

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரான சர்தார் சிங், அனைத்துலக ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் போதுமான போட்டிகளில் விளையாடிவிட்டதாகக் கூறிய சர்தார், இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். 32 வயதான அவர் 350க்கும் அதிகமான ஆட்டங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்து உள்ளார். 2008 முதல் 2016 வரை எட்டு ஆண்டுகளுக்கு அணித்தலைவராகவும் இருந்துள்ளார். 2008ல் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஆகக் குறைந்த வயதில் தலைவர் பொறுப்பேற்றவர் எனும் பெருமையைப் பெற்றார். இருமுறை ஒலிம்பிக் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 2012ல் அர்ஜுனா விருதும் 2015 பத்மஸ்ரீ விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டார்.