விளையாட்டு வீரரின் இறப்பு ஓர் அசம்பாவிதமே

விளையாட்டு வீரரின் இறப்பு ஓர் அசம்பாவிதமே

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியன்று நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற பிரிட்டிஷ் நாட்டவரான 42 வயது திரு ஸ்டீவன் பெக்லி, 1.5 கிலோமீட்டர் நீச்சல் பந்தயத்தின்போது உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மரணம் ஓர் அசம்பாவிதம் என்று மரண விசாரணை அதிகாரி திருவாட்டி கமலா பொன்னம்பலம் நேற்று உறுதி செய்தார். மூவர் அடங்கிய குழு இப்போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்த நிலையில் திரு பெக்லி கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் பின் அவரின் உடல் அசைவற்ற நிலையில் நீரிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்டுப் பின் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு பெக்லி உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.