முதல் பயிற்சி சுற்றில் ரிக்கார்டோ முதலிடம்

முதல் பயிற்சி சுற்றில் ரிக்கார்டோ முதலிடம்

1 mins read

நாளை சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக நேற்று பயிற்சி சுற்றுகள் நடத்தப்பட்டன. முதல் பயிற்சி சுற்றில் ரெட் புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தில் ரெட் புல் அணியின் மற்றொரு வீரரான மேக்ஸ் வெர்ஸ்டப்பன் போட்டியை முடித்தார். மூன்றாவது இடம் ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டலுக்குச் சென்றது. நடப்பு வெற்றியாளரான மெர்சிடிஸ் அணியின் லூவிஸ் ஹேமில்டனால் ஆறாவது இடத் தையே பிடிக்க முடிந்தது. கார் அதிவேகமாகச் செல்ல உதவும் சிறப்பு டயர்களை ஹேமில்டன் பயன்படுத்தாததால் அவர் ஆறாவது இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. முதல் பயிற்சி சுற்றின் தொடக்கத்தில் அவர் அந்தச் சிறப்பு டயர்களைப் பயன்படுத்தி மற்ற வீரர்களைவிட வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். பிறகு தமது காரின் டயர்களை மாற்றி னார். மாறாக, ரெட் புல் அணியும் ஃபெராரியும் அதிவேகமாகச் செல்ல உதவும் 'ஹைபர்சாஃப்ட்' டயர்களைப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட்டன.

ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வெட்ட லைவிட 30 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார் ஹேமில்டன். ஃபெராரியுடன் அடுத்த ஆண்டு இணைய இருக்கும் சார்ல்ஸ் லெகிலர்க்கின் சாவ்பர் கார் பந்தயத் தடத்தின் ஓரத்தில் உள்ள சுவர் மீது மோதியது. லெகிலர்க் செய்த பிழையே அந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.