பட்டத்தைத் தக்கவைத்தார் ஹேமில்டன்

பட்டத்தைத் தக்கவைத்தார் ஹேமில்டன்

2 mins read
b6e88402-75c5-4caa-8352-a2a3ea6cff60
-

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட் டத்தைத் தக்கவைத்துக்கொண்டார் 'மெர் சிடிஸ்' குழு சார்பில் எஃப்1 பந்தயங்களில் பங்கேற்று வரும் லூவிஸ் ஹேமில்டன். பிரிட்டனைச் சேர்ந்த 33 வயது ஹேமில்டன் 2017ஆம் ஆண்டிலும் வாகை சூடியிருந்தார். சிங்கப்பூரில் அவர் வெற்றியை ஈட்டியிருப்பது இது நான்காவது முறை. இதன்மூலம் அதிக முறை இங்கு வென்றவர்களில் ஃபெராரி குழுவின் செபாஸ்டியன் வெட்டலுடன் அவர் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சனிக்கிழமை நடந்த பந்தயத்தைத் தொடங்கும் நிலையைத் தீர்மானிக்கும் பந்த யத்தில் முதலாவதாக வந்த ஹேமில்டன் நேற்றும் தொடக்கத்தில் இருந்தே பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தினார். மொத்தம் 61 சுற்றுகள் கொண்ட பந்தயத்தை அவர் 1 மணி நேரம் 51 நிமிடம் 11.611 வினாடிகளில் முடித்தார். இரண்டாவதாக ரெட் புல் குழுவின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும் அதற்கடுத்த நிலை யில் வெட்டலும் வந்தனர். இந்த வெற்றியின்மூலம் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள வெட்டலைவிட 40 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 281 புள்ளிகளுடன் ஹேமில்டன் முதல்நிலையில் நீடிக்கிறார். முன்னதாக, சிங்கப்பூர் எஃப்1 பந்தய வரலாற்றில் ஒரு சுற்றை அதிவேகமாகக் கடந்தவர் என்ற சாதனையை ரெட் புல் குழுவின் டேனியல் ரிக்கார்டோ நேற்று நிகழ்த்தினார். 36வது சுற்றைக் கடக்க அவர் ஒரு நிமிடம் 43.853 வினாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களில் பந்தயத்தைக் காண 263,000க்கும் மேற்பட் டோர் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 2017ஐ ஒப்புநோக்க, இது 3.5% அதிகம். அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் இதுவே ஆக அதிக பட்சமும்கூட; ஒட்டுமொத்தத்தில், 2வது அதிக பட்சம். உலகின் முதல் இரவு நேர எஃப்1 கார் பந்தயமான சிங்கப்பூர் கிராண்ட் பிரீ தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டில் 300,000 பார்வையாளர்கள் அதனைக் கண்டுகளித்தனர்.

2018 சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை வென்ற உற்சாகத்தில் லூவிஸ் ஹேமில்டன். படம்: ஏஎஃப்பி