துபாய்: ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியில் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி 137 ஓட்ட வித் தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. அவ்விரு அணிகளுடன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், ஹாங்காங் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை, பங்ளாதேஷ் அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்று பங்ளாதேஷ் அணி முதலில் பந்தடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி, தமது மறுவருகையை அறிவித்தார். போதாதற்கு, தொடக்க ஆட்டக் காரர் தமீம் இக்பால், லக்மல் பந்து வீச்சில் காயமடைந்து வெளியேறி யதும் பங்ளாதேஷ் அணிக்குப் பேரிடியாக அமைந்தது.
இருப்பினும், முகம்மது மிதுன் (63) = முஷ்ஃபிகுர் ரஹீம் (144) இணை அவ்வணியைச் சரிவில் இருந்து மீட்டது. மிதுன் ஆட்டமிழந்ததும் பங்ளா தேஷ் அணி மளமளவென விக் கெட்டுகளை இழந்தது. அவ்வணி 229 ஓட்டங்களுக்கு ஒன்பது விக் கெட்டுகளை இழந்த நிலையில், ஒரு கையில் கட்டுப்போட்டபடி மீண்டும் களமிறங்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் தமீம். அதைக் கண்டு உத்வேகம் அடைந்த ரஹீம் மேலும் 32 ஓட்டங் களைச் சேர்க்க, பங்ளாதேஷ் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த இலங்கை அணி 35.2 ஓவர்களிலேயே 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து படு தோல்வி அடைந்தது. பங்ளாதேஷ் தரப்பில் அணித் தலைவர் மொர்ட் டாசா, முஸ்தஃபிசுர், மெஹதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இலங்கை அணி, ஆப்கானிஸ் தானுடன் இன்று மோதுகிறது.
சதம் விளாசி தமது அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவிய பங்ளாதேஷ் ஆட்டக்காரர் முஷ்ஃபிகுர் ரஹீம். படம்: ஏஎஃப்பி

