லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் யுனை டெட் குழு விளையாடிய முதல் நான்கு ஆட்டங்களில் இரண்டில் தோற்றிருந்ததால் அக்குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ விற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பின்னிரவில் நடந்த ஆட்டத்தில் மேன்யூ 2=1 என்ற கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழுவை வெற்றிகொண்டதால் மொரின்யோ சற்று நிம்மதி அடைந்துள்ளார். மாறாக, முதல் நான்கு ஆட்டங்களிலும் வென்று வியப்பளித்த வாட்ஃபர்ட் குழு, இப்பருவத்தில் முதல் தோல்வியை எதிர் கொள்ள நேரிட்டது.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ரொமேலு லுக்காகுவும் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கிறிஸ் ஸ்மாலிங்கும் கோல் அடிக்க, 2=0 என்ற முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது மேன்யூ. பிற்பாதியில் வாட்ஃபர்ட் குழு எழுச்சி யுடன் ஆடியது. 65வது நிமிடத்தில் ஆண்ட்ரே கிரே ஒரு கோலடித்து, மேன்யூ வின் முன்னிலையைக் குறைத்தார். இருந் தாலும், இன்னும் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்ய அக்குழு போரா டியும் அது ஈடேறாமல் போனது. இந்த வெற்றியை மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட மொரின்யோ, அதே நேரத் தில் இரண்டாம் பாதியில் தம் குழுவினர் சற்று மந்தமாக விளையாடினர் என்றும் சொன்னார். "இந்த வெற்றியின்மூலம் ஆர்சனல், ஸ்பர்ஸ் ஆகிய குழுக்களைப் போல நாங் களும் ஒன்பது புள்ளிகளுடன் இருக்கி றோம். வாட்ஃபர்ட் திறமையான குழு. முன் னணி குழுக்களுக்குச் சிரமம் தருவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும். இடைவேளையின்போது நான் மேன்யூ வீரர் களிடம் சொன்னது போலவே கிட்டத்தட்ட நடந்தது. '4-0 அல்லது 5-0 என இந்த ஆட்டத்தில் வெல்ல முடியும்.
இல்லாவிடில் வெற்றிபெற கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்' என்று சொன்னேன். அது போலவே, வாட்ஃபர்ட் பிற்பாதியில் ஒரு கோலைப் போட்டுவிட்டது. 2-1 என்ற நிலையில் இருக்கும்போது ஆட்டம் எந்தக் குழுவிற்குச் சாதகமாக அமையும் எனக் கணிக்க முடியாது," என்று மொரின்யோ கூறினார்.
வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் இரண்டாவது கோலை அடித்து, வெற்றியை உறுதி செய்யும் கிறிஸ் ஸ்மாலிங் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

