துபாய்: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை இன்று சந்திக்க உள்ள நிலையில் இந்திய வீரர் அம்பதி ராயுடு செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். "விராத் கோஹ்லிக்கு ஆசிய போட்டியில் ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது. அவர் இல்லாதது நிச்சயம் மிகப்பெரிய இழப்பு என்பதை மறுக்கமுடியாது. "அதே வேளையில் கோஹ்லி களத்தில் இல்லையெனிலும் போராடி வெல்லும் திறமை நம் வீரர்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அம்பத்தி ராயுடு. மகேந்திர சிங் டோனி, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் அணியில் உள்ள அனை வருக்கும் எப்போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வழி காட்டியாக இருக்கிறார். எனக்கும், நல்ல நிலையை எட்டுவதற்கு நிறைய உதவி செய்துள்ளார்.
"இந் திய அணியில் நடுத்தர வரிசையில் நிரந்தர இடத்தைப் பிடிப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. "எனது திறமையை வெளிப் படுத்த வாய்ப்புக் கிடைத் திருக்கிறது அவ்வளவுதான்.
"மற்றபடி இதைப் பற்றி அதிகமாக நினைத்து எனக்குள் நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை. இப்போதைக்கு உலகக் கிண்ணம் குறித்து யாரும் நினைத் துக் கொண்டிருக்க வில்லை. "தற்போது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளை யாடிக் கொண்டிருக்கிறோம். "அதன் மீதே முழு கவனமும் உள்ளது," என்றார் அம்பதி.

