இலங்கை அணியின் பயணம் முடிந்தது

இலங்கை அணியின் பயணம் முடிந்தது

1 mins read
48b48284-aa0a-42d6-98e9-1567bd601702
-

துபாய்: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது. ஐந்து முறை ஆசியக் கிண்ணம் வென்ற இலங்கை நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 91 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பூவா தலையாவில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது. அதன்படி முகம்மது ஷசாத், ஜனத் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷசாத் 34 ஓட்டங்களும் ஜனத் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா பொறுப்புடன் விளை யாடி 72 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆப்கான் வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 249 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் திசர பெரேரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து, 250 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சு மற்றும் அற்புதமான களக்காப்பு இலங்கை அணியைத் திக்குமுக்காட வைத்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து இலங்கையின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்க்க, தோல்வியின் பிடியிலிருந்து தப்பிக்க இலங்கை கடுமையாகப் போராடியது.

இலங்கை வீரர் டாசுன் ஷனகாவை ஆட்டமிழக்கச் செய்து கொண்டாடும் ஆப்கானிஸ்தான் வீரர்கள். படம்: ஏஎஃப்பி