வெற்றியை நழுவவிட்ட சௌத்ஹேம்டன்

வெற்றியை நழுவவிட்ட சௌத்ஹேம்டன்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சௌத்ஹேம்டனும் பிரைட்டனும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன. இந்த ஆட்டம் நேற்று அதிகாலை நடைபெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது சௌத்ஹேம்டன்.

இருப்பினும், மனந்தளராமல் போராடிய பிரைட்டனுக்குக் கைமேல் பலன் கிட்டியது. சௌத்ஹேம்டன் ஆட்டத்தின் 35வது, 65வது நிமிடங்களில் கோல் போட்டது. சௌத்ஹேம் டனின் இரண்டாவது கோல் புகுந்து இரண்டு நிமிடங்களில் பிரைட்டன் அதன் முதல் கோலைப் போட்டது. டஃபி தலையால் முட்டிய பந்து கோலானதை அடுத்து பிரைட்டன் வீரர்கள் உத்வேகம் அடைந்தனர். ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது பிரைட்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி மரே பந்தை வலைக்குள் அனுப்பினார். இதன் மூலம் பிரைட்டனுக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது.