கடைசி நிமிட கோல்: நிம்மதியில் லிவர்பூல்

கடைசி நிமிட கோல்: நிம்மதியில் லிவர்பூல்

1 mins read
5aaac956-adc2-4e73-88b3-4c5f6deaab29
-

ஆன்ஃபீல்ட்: லிவர்பூல் அணியில் மத்திய திடல் ஆட்டக்காரராக ஜேம்ஸ் மில்னர் 2015ஆம் ஆண்டு சேர்ந்த பின் அவரைவிட அதிகமாக பெனால்டி கோல் போட்டவர்கள் மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ வும் ஸ்பர்சின் அணியின் ஹேரி கேனும்தான். இந்த நிலையில், நேற்று அதிகாலை சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் பாரிஸ் செயிண்ட் ஜெமானுக்கு எதிராக ஜேம்ஸ் மில்னர் மீது லிவர்பூல் அணி நம்பிக்கை வைத்து அவரைக் களமிறக்கியது வீண் போகவில்லை. ஆட்டத்தின் 36ஆம் நிமிடத்தில் லிவர்பூலின் ஜார்ஜினோ வைன்ஹால்டம் கீழே வீழ்த்தப்பட்டதற்கு எதிராகக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மில்னர் கோலாக்கினார். முன்னதாக, ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஸ்டரிட்ஜ் லிவர்பூல் அணியின் முதல் கோலை போட்டார். பின்னர் பாரிஸ் செயிண்ட் ஜெமான் ஆட்டத்தில் சுறுசுறுப்பு ஏற மியுனியே அதன் முதல் கோலைப் போட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 83ஆம் நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே லிவர்பூல் அசந்திருப்பதைப் பார்த்து பந்தை தன்வசப்படுத்தி வேகமாக முன்னேறி கணநேரத்தில் லிவர் பூலுக்கு எதிரான இரண்டாவது கோலைப் போட்டார்.

லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டரிஜ் தனது அணியின் முதல் கோலை வலைக்குள் செலுத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ்