ஹாங்காங் அணியைப் போராடி வென்றது இந்தியா

ஹாங்காங் அணியைப் போராடி வென்றது இந்தியா

2 mins read
57f24241-730c-401f-b9e5-e376a82b596b
-

துபாய்: ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா = ஹாங்காங் அணிகள் நேற்று முன்தினம் விளையாடின. பூவா தலையாவில் வென்ற ஹாங்காங் அணித் தலைவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்தடித்தது. ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங் கினார்கள். இந்தியா 7.4 ஓவரில் 45 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து தவானும் அம்பதி ராயுடும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர்.

29.2 ஓவரில் 161 ஓட்டங்களில் அம்பதி ராயுடு 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு தவான் = அம்பதி ராயுடு இணை 116 ஓட் டங்கள் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு தவானுடன் தினேஷ் கார்த்திக்இ ணைந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ஓட்டம் எடுத்திருக்கும்போது 36வது ஓவரின் கடைசிப் பந்தில் ஓர் ஓட்டம் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரி, சதம் அடித்தார். தவான் 127 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். தவான் ஆட்டமிழக் கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங் கள் எடுத்திருந்தது. அதன் பின் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ஓட்டங் களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் சேர்த்தது. இத னால் ஹாங்காங் அணிக்கு 286 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த அனைத்துலக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கலீல் அகமது (வலது) ஹாங்காங் அணியின் பந்தடிப்பாளர் ஷர்டுல் தக்குரின் பந்தைப் பிடிக்கிறார். படம்: ஏஎஃப்பி