'கேதர் ஜாதவின் பந்துவீச்சைக் கணித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது'

'கேதர் ஜாதவின் பந்துவீச்சைக் கணித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது'

2 mins read

துபாய்: ஆசியக் கிண்ண கிரிக் கெட் போட்டியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்த இந்தியா = பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், பூவா தலையாவில் வென்று பந்தடித்தனர் பாகிஸ் தான் அணி வீரர்கள். இந்திய வீரர்களின் நேர்த்தி யான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடி யா மல் அவர்கள் அடுத் தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களில் சுருண் டது பாகிஸ்தான். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டு களை மட்டுமே இழந்து 164 ஓட் டங் களைக் குவித்து 8 விக்கெட்டு கள் வித்தியாசத் தில் எளிதில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

இந்தப் போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃப்ராஸ் அகமது கூறுகையில், "நாங்கள், குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவரது சுழற்பந்து வீச்சை எதிர்க்கொள்வதற்கு ஏற்ப வியூகம் அமைத்தோம். ஆனால், எதிர் பாராமல் மூன்றாவதாக வந்த கேதார் ஜாதவ் எங்களின் வியூ கங்களைத் தகர்த்தெறிந்து விக் கெட்டு களைச் சாய்த்துவிட்டார். கேதர் ஜாதவின் பந்துவீச்சைக் கணித்து ஆடுவது மிகவும் கடின மாக இருந்தது. "முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த பின்னர் பாபர் அசாம், சோயிப் மாலிக் இணையின் நிதான ஆட்டத்தினால் சரிவில் இருந்து அணி மீண்டது. ஆனால், அதன் பிறகு மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நாங்கள் எதிர் பார்த்த ஓட்டங்களை அடிக்க முடியவில்லை. "எங்கள் வீரர் கள் மோசமாக விளையாடியதால் ஆட்டமிழந் தோம். எனி னும் குழு போட்டிகள் என்பதால் இதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டி களில் இந்தத் தவறுகளைச் சரிசெய்வோம் என அவர் கூறினார்.