சிட்டி அதிர்ச்சித் தோல்வி

சிட்டி அதிர்ச்சித் தோல்வி

1 mins read

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் மான் செஸ்டர் சிட்டி எதிர்பாராத் தோல் வியைச் சந்தித்துள்ளது. நேற்று அதிகாலை சிட்டியும் பிரெஞ்சுக் குழுவான லியோனும் மோதின. இந்த ஆட்டம் சிட்டியின் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது. சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா இடைநீக்கம் செய்யப் பட்டதால் அவர் ரசிகர்களுடன் அமர்ந்து ஆட்டத்தைப் பார்க்க நேரிட் டது. ஆட்டம் தொடங்கி 26வது நிமிடத்தில் சிட்டியின் தற்காப்பு ஆட்டங்கண்டது. பந்தை பெனால்டி எல்லையிலிருந்து அப்புறப்படுத்த தவறிய சிட்டிக்கு தக்க தண்டனை யைக் கொடுத்தார் லியோனின் மேக்ஸ்வெல் கோர்னெட். அவர் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. தமது குழு எப்படியும் மீண்டு வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த சிட்டி ரசிகர்களுக்கு இடை வேளைக்கு ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் இருந்தபோது பேரிடி விழுந்தது.

சிட்டி தற்காப்பு ஆட்டக்காரர் களை ஓரங்கட்டி லியோனின் நபில் ஃபெகிர் கோல் போட்டார். முற்பாதியிலேயே எதிரணி இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை வகிப்பதைப் பார்த்து சிட்டி வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடைவேளையின்போது சிட்டி 2=-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்து வலுவான நிலையில் இருந்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மூன்றாவது கோலைப் போட லியோனுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் டிபே அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளி யானது. நூலிழையில் தப்பிய சிட்டி உத்வேகம் அடைந்து கோல் வேட்டையில் இறங்கியது.