ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆப்கானிஸ்தான் வெற்றி

1 mins read

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்ளாதேஷ் அணி யைப் புரட்டி எடுத்தது ஆப்கானிஸ்தான். பூவா தலையாவில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. பங்ளாதே‌ஷின் ஷாகிப் அல் ஹசன் துல்லியமாகப் பந்து வீசி ஆப்கானிஸ்தான் முன்னணி வீரர்களை வெளியேற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நயீபும் ர‌ஷீத் கானும் நிதானமாக ஆடினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 250 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 255 ஓட்டங்களைக் குவித்தது. சிறப்பாக ஆடிய ர‌ஷீத் கான் 32 பந்துகளில் ஆட்டமிழக் காமல் 57 ஓட்டங்களைக் குவித் தார். பங்ளாதேஷ் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து, 256 ஓட்டங் களை இலக்காகக் கொண்டு பங்ளாதேஷ் பந்தடிக்கத் தொடங் கியது.

ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் பங்ளாதே‌ஷின் லிட்டன் தாஸ் 6 ஓட்டங்கள், ஹொசைன் 7 ஓட்டங்கள், மொமினுல் ஹக் 9 ஓட்டங்கள், முகம்மது மிதுன் 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், 42.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.