சிங்கப்பூர்: இந்த ஆண்டின் 'எஸ்டி ரன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஓட்ட'த்தில் 13,000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆறாவது ஆண்டாக நடத்தப் பட்ட ஓட்ட நிகழ்ச்சி இவ்வாண்டு மூன்று வகையாக இடம்பெற்றது. 18.45 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என்னும் அந்த மூன்று வகை ஓட்டங்களிலும் பங்கேற்க அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டனர். நிக்கல் ஹைவேயில் காலை 5 மணிக்கு ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 18.45 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியவர்கள் முதலாவதாக ஓட்டத்தை தொடங் கினர். இந்த தூரத்தை 1 மணி நேரம் 2 நிமிடங்கள் 49 விநாடி களில் முதலாவதாக ஓடி முடித் தவர் பென் மொரியு என்னும் பிரிட்டிஷ் ஆடவர். பெண்களில் முதலாவதாக பந் தயத்தை நிறைவு செய்தவர் ஜப்பானியரான மாக்கி இனாமி. அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 மணி நேரம் 11 நிமிடங்கள் 1 விநாடி.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி தழ் தொடங்கப்பட்ட ஆண்டான 1845 என்பதைக் குறிக்கும் வகை யில் 18.45 கிலோ மீட்டர் ஓட்டம் இடம்பெற்றது. இதனை 'ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஆசிரியரும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்

