சாதனையை வசமாக்கிய லிவர்பூல்

சாதனையை வசமாக்கிய லிவர்பூல்

1 mins read
d7dfb2d2-5ef0-49e9-92a4-d3cc01872f6f
-

லண்டன்: லிவர்பூல் இதுவரை எந்த ஒரு பருவத்திலும் இல்லாத அளவுக்கு பிரகாசத்தில் உள்ளது. நேற்று முன்தினம் சவுதாம்ப்டனை 3=0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதன் மூலம் பிரிமியர் லீக்கில் புதிய சாதனை படைத்தது லிவர்பூல். இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொட ரின் முக்கிய நான்கு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இதில் லிவர்பூல் அணி இந்தப் பருவத்தில் தொடர்ச்சியாக ஆறா வது வெற்றியைப் பெற்று சாதித் தது. மான்செஸ்டர் சிட்டி, டோட் டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் தங்களது எதிரணிகளை வீழ்த்தி வெற்றி கண்ட நிலையில் மான் செஸ்டர் யுனைடெட்=வோல்வ்ஸ் இடையிலான போட்டி மட்டும் சமநிலையில் முடிந்தது.

இதன்மூலம் லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக்கில் இது வரை ஆடிய ஆறு போட்டிகளிலும் வென்றதன் மூலம் பட்டியலின் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு உள்ளது. அந்த அணி கடந்த 28 ஆண்டுகளில் இபிஎல் தொடரின் முதல் ஆறு போட்டி களிலும் தொடர்ச்சியான வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு லீக் போட்டிகளிலும் கோல் போடத் தவறிய முகமது சாலா இந்த ஆட்டத்தில் புகுத்திய கோல் லிவர்பூலின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.