ஐந்தாண்டுகளில் முதலாவது வெற்றி

ஐந்தாண்டுகளில் முதலாவது வெற்றி

1 mins read

அட்லாண்டா: ஒரு காலத்தில் கோல்ஃப் விளையாட்டில் அசைக்க முடியாதவராகத் திகழ்ந்த அமெரிக்க வீரர் டைகர் உட்ஸ், 42, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார். திருமணத்திற்குப் பின் பல பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்க, உட்சின் குடும்ப வாழ்வில் புயல் வீசியது. விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து செல்ல, விளையாட்டிலும் அவர் சோபிக்கத் தவறினார் . இந்நிலையில், அட்லாண்டாவில் நடந்த சாம்பியன்‌ஷிப் போட்டியில் அவர் வாகை சூடினார்.