ஆர்சனலின் புதிய வெற்றிக் கூட்டணி

ஆர்சனலின் புதிய வெற்றிக் கூட்டணி

1 mins read
e58d9483-f28c-4626-8b0b-1680a403fada
-
Google News Preferred Icon

லண்டன்: பெரும் தொகையைச் செலவழித்து இரு புதிய தாக்குதல் ஆட்டக்காரர்களை வாங்கிய ஆர் சனல் காற்பந்துக் குழு, அதற்கான பலனை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளது. கடைசியாக 200-3-=04ஆம் பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்ற அக்குழு, அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. போதாதற்கு, கடந்த இரு பருவங்களாக சாம் பியன்ஸ் லீக்கிற்கும் அக்குழு தகுதிபெறவில்லை. இந்நிலையில், கடந்த பருவத் தில் 52 மில்லியன் பவுண்டுக்கு அலெக்சாண்டர் லாக்கஸெட், 55 மி. பவுண்டுக்கு பியர் எமரிக் ஒபமெயாங் என இரு தாக்குதல் ஆட்டக்காரர்களை அக்குழு வாங் கியது. அவர்கள் இருவரும் கோல் வேட்டையைத் தொடங்கியிருப்ப தால் இப்பருவத்தில் ஆர்சனல் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எவர்ட்டனுக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத் தில் லாக்கஸெட்டும் ஒபமெயாங் கும் ஆளுக்கு ஒரு கோலைப் போட, ஆர்சனல் 2=0 என வெற்றி பெற்றது. புதிய நிர்வாகி உனாய் எமரியின்கீழ் முதலிரு ஆட்டங் களில் தோற்றபோதும் அடுத்த நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சி யாக வென்றுள்ளது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுடன் 0=0 என கோலேதுமின்றி சமன் கண்டதால் செல்சி குழு பட்டிய லின் முதல் நிலையிலிருந்து 3ஆம் நிலைக்கு இறங்கியது.

எவர்ட்டன் குழுவிற்கெதிரான இபிஎல் காற்பந்து ஆட்டத்தில் ஆர்சனலின் இரண்டாவது கோலை அடித்த மகிழ்ச்சியில் இப்படி குட்டிக்கரணம் அடிக்கிறார் பியர் எமரிக் ஒபமெயாங். படம்: ராய்ட்டர்ஸ்