சதங்களால் வதம் செய்த இந்தியா

சதங்களால் வதம் செய்த இந்தியா

2 mins read
02260988-a5fe-42c0-9ae3-6d18ecb4709c
-

துபாய்: ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பரம எதிரி யான பாகிஸ்தானை இரண்டாம் முறையாக நசுக்கி, முதல் அணி யாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி. 'சூப்பர் 4' சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பங்ளாதேஷை பணிய வைத்த இந்திய அணி, தனது இரண்டாவது ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் அடித்த சதங்களால் பாகிஸ்தானைப் பதம் பார்த்தது. பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபிராஸ் அகமது தமது அணி முதலில் பந்தடிக்கும் என அறிவித் தார். அவரது இந்த முடிவு தவறா னது என வர்ணனையாளர்கள் கணித்தது சரியாகிப் போனது. மந்தமாகப் பந்தடிக்கத் தொடங் கிய பாகிஸ்தான் அணி 58 ஓட்டங் களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இருப்பினும், அனுபவ ஆட்டக்காரரான ஷோயப் மாலிக், சர்ஃபிராசுடன் இணைந்து பொறுப்பாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.

இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 107 ஓட்டங்களைச் சேர்த்தனர். அவர்களின் ஆட்டத் தைப் பார்த்தபோது பாகிஸ்தான் அணி 270 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சர்ஃபிராஸ் 44 ஓட் டங்களிலும் மாலிக் 78 ஓட்டங் களிலும் வெளியேறியதும் இந்திய அணி ஆட்டத்தைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தது.

ஆளுக்கொரு சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர்கள் ரோகித் சர்மா (இடது), ‌ஷிகர் தவான். படம்: ஏஎஃப்பி