சிறந்த காற்பந்து வீரராக மோட்ரிச் தேர்வு

சிறந்த காற்பந்து வீரராக மோட்ரிச் தேர்வு

2 mins read
af69231e-fa6c-42b7-85e6-d5cc23ee5d6e
-
Google News Preferred Icon

லண்டன்: உலகின் சிறந்த காற் பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை கடந்த பத்தாண்டுகளாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி ஆகிய இரு வரும்தான் மாறி மாறி வென்று வந்தனர். இந்த நிலையில், அவர்களின் ஆதிக்கத்தை முறியடித்து இந்த முறை அவ்விருதைத் தன்வசமாக்கி உள்ளார் குரோவே‌ஷிய அணித் தலைவரும் பிரபல ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடி வருபவ ருமான லூக்கா மோட்ரிச், 33. கடந்த மூன்று பருவங்களாகத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று ரியால் மட்ரிட் குழு சாதனை படைத்தது. அம் மூன்று முறையும் மோட்ரிச் இறுதிப் போட்டியில் ரியாலைப் பிரதிநிதித்து இருக்கிறார்.

ரஷ்யாவில் இவ்வாண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளிலும் குரோவே‌ஷிய அணியை இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்ற பெருமையும் இவரையே சாரும். அதனால், உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதையும் இவர் கைப்பற்றினார். இப்படி தொடர்ச்சியாக பல விருதுகளை மோட்ரிச் வென்ற போதும் அதற்கெல்லாம் முத்தாய்ப் பாக அமைந்தது 'ஃபிஃபா தி பெஸ்ட்' எனப்படும் இவ்வாண்டிற் கான உலகின் சிறந்த காற்பந்து வீரர் விருது.

மோட்ரிச்சுக்கு ஆதரவாக 29 விழுக்காட்டினர் வாக்களித்தனர். ரொனால்டோ (19%), சாலா (11%), எம்பாப்பே (10%), மெஸ்ஸி (9%) ஆகியோர் அடுத்த நிலை களில் வந்தனர். கடந்த 12 ஆண்டுகளில் மெஸ்ஸி கடைசி மூவரில் ஒருவ ராக வராதது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. காற்பந்து விளையாட்டின் ஆக உயரிய விருதை வென்றபோதும் மோட்ரிச் சிறிதும் தலைக்கனமின்றி, தன்னடக்கத்துடன் பேசினார்.

"என் வாழ்க்கையின் மிகச் சிறந்த காற்பந்துப் பருவம் இது. என்னால் நம்பவே முடியவில்லை. குழு அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கடந்த ஓராண்டு காலம் எனக்கு மிகச் சிறப்பானதாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் நான் சாதித்தவற்றை நினைத்துப் பார்க்கும்போது எனக்குப் பெருமை யாக உள்ளது. இதை என் வாழ் நாள் முழுதும் மறக்கமாட்டேன்," என்றார் இவர்.

குரோவே‌ஷிய அணித் தலைவர் லூக்கா மோட்ரிச். படம்: இபி