புதுடெல்லி: தமக்குமுன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனியிடம் இருந்துதான் தலைமைப்பண்பு பற்றிக் கற்றுக்கொண்டேன் என்று இந்நாள் தலைவர் விராத் கோஹ்லி கூறியிருக்கிறார். "அணியின் துணைத் தலை வராக நியமிக்கப்படுவதற்கு முன் பிருந்தே கிரிக்கெட்டின் நுணுக் கங்கள் பற்றி டோனியுடன் ஆலோ சித்து வருபவன் நான். அவ்வப் போது எனது எண்ணங்களையும் அவரிடம் சொல்வேன்," என்று 'விஸ்டன் கிரிக்கெட்' மாத இத ழுக்கு அளித்த நேர்காணலின் போது கோஹ்லி தெரிவித்தார். "கிரிக்கெட்டைப் பற்றி யோசிப் பதை நான் விரும்புகிறேன். அத னால்தான் அணித்தலைவராக இருப்பதையும் இலக்கை விரட்டு வதையும் நான் அனுபவித்துச் செய்கிறேன். டோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். பல முறை 'ஸ்லிப்' நிலையில் அவ ருக்கு அருகே நின்றபடி அணியை வழிநடத்திச் சென்ற விதத்தைக் கவனித்திருக்கிறேன்," என்றார் கோஹ்லி.
தமது தலைமைத்துவம் பற்றிக் கருத்துரைத்த அவர், 'நம்மால் முடியும்' என்ற நேர்மறை அணுகு முறையே தமது வழி என்றும் சக இந்திய வீரர்களும் அதையே பின் பற்றவேண்டும் என எதிர்பார்ப்ப தாகவும் குறிப்பிட்டார். டி20 போட்டிகளின் வருகைக் குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வம் குறையத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படு கிறது. இதனிடையே, இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போன்று பல நாடுகளும் தங்களுக்கென ஒரு பிரத்தியேக டி20 தொடரை உருவாக்கி, நடத்தி வருகின்றன.

