துபாய்: கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சூதாட்டத்தை ஒழிக்க முயன்றுவரும் வேளையில் 'அதற்கு விடமாட்டோம்' என்று சூதாட்டத் தரகர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின் றனர். கடந்த ஓராண்டில் மட்டும் முழு உறுப்பினர்களாக உள்ள நான்கு அணிகள் உட்பட ஐந்து அனைத் துலக அணிகளின் தலைவர்களை அவர்கள் அணுகியுள்ளனர் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் யார் என்பதைத் தெரி விக்க மன்றம் மறுத்துவிட்டது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது, தங்க ளுடன் ஒத்துழைத்தால் ஏராளமான பணம் தருவதாகக் கூறி சூதாட்டத் தரகர் ஒருவர் தொடர்புகொண்ட தாகவும் ஆனால் அதனைத் தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் பாகிஸ் தான் அணித் தலைவர் சர்ஃப்ராஸ் அகமது கூறியிருந்தார். அத்துடன், அது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கும் அவர் தகவல் அளித்தார். இதற்கிடையே, தற்போது ஆப் கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் முகம்மது ஷசாத்தையும் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அணித் தலைவர்கள் ஐவரை அணுகிய சூதாட்டத் தரகர்கள்
1 mins read

