டோனி: ஆப்கானின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது

டோனி: ஆப்கானின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது

2 mins read
0f60d22c-cf86-4c41-a963-2dafda20aec4
-

துபாய்: ஆசிய கிண்ணக் கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி யின் வெற்றியைப் பறித்த ஆப்கா னிஸ்தானின் பந்துவீச்சு மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறி உள்ளார் இந்திய அணித் தலைவர் டோனி. வெற்றியை விரட்டிய இந்திய அணியைத் தனது பந்துவீச்சால் அலற வைத்தது ஆப்கானிஸ்தான். வெற்றி பெற கடைசி 6 பந்தில் 7 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற போது, அந்த ஓவரை வீசிய ர‌ஷித் கான் 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் ஆட்டம் வெற்றி-, தோல்வியின்றி முடிந்தது. முதலில் பந்தடித்த ஆப்கான் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணிக்கு முகமது ஷாஜத், ஜாவித் இணை நல்ல துவக்கம் கொடுத்தது. சதம் கடந்த ஷாஜத் 124 ஓட்டங்கள் விளாசினார். இந்தியாவின் ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த் தார். பின்னர் °பந்தடித்த இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு ராயுடுவை இழந்தபோது 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டோனி (8) நடுவரின் தீர்ப்பில் எல்பிடபிள்யூ முறையில் திரும்பி னார். ராகுல் தனது விக்கெட்டை மறுபரிசீலனை செய்யக்கோரிய தால், டோனியால் மறுபரிசீலனை செய்ய முடியாமல் போனது குறிப் பிடத்தக்கது. சர்ச்சையைச் கிளப்பிய இத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்திய அணி சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் சற்று நிம்மதி அளித்தது என்றாலும் அவரும் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 205 ஒட்டத்திற்கு 6 விக் கெட்டுகளை இழந்த இந்தியா, தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. கடைசி 2 பந்தில் 1 ஓட்டம் தேவை என்ற நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார்.

இந்திய அணித் தலைவர் டோனியின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஆப்கானிஸ்தான் வீரர் ஜாவித் அகமதி (வலது). டோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். படங்கள்: ஏஎஃப்பி