லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் குழுவின் பால் போக்பா இனி தலைவராக செயல்பட மாட் டர் என்ற செய்திக்குப் பின் அதன் நிர்வாகி மொரின்யோவிற் கும் போக்பாவிற்கும் மோதல் என்ற வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், "போக்பா இனித் தலைவராக செயல்படமாட்டார் என்று மட்டும்தான் கூறினேன். மற்றபடி எனக்கு அவரோடு எந்தப் பிரச்சினையும் இல்லை.
"நான்தான் நிர் வாகி. எனக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. "என்னுடைய முடி விற்கு யாரும் விளக் கம் அளிக்க தேவை யில்லை," என்றார். டெர்பி குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் போக்பா விளையாட வில்லை என்றாலும் அந்த ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மொரின்யோ இவ்வாறு கூறினார். மேலும் வேறு சில ஆட்டக்காரர்கள் மீதும் தனக்கு அதிருப்தி நிலவுவதாகவும் அவர் சொன்னார். இதற்கு முன்னர் நடந்த உல்வ்ஸ் குழு விற்கு எதிரான லீக் கிண்ணக் காற்பந்து ஆட்டத்தில் போக்பா வின் தவற்றால் யுனை டெட் 1=1 என்ற கோல் கணக்கில் சமநிலை காண நேர்ந்தது. ஆனால் புதிய ஆட் டக்காரர்களோடு இறங் கியும் டெர்பியிடமும் தோற்றது. போக்பா, யு வெ ன் ட சி லி ரு ந் து 2016ல் யுனைடெட்டில் இணைந்தார்.

