லீக் கிண்ணம்: டெர்பியிடம் தோற்று மூட்டையை கட்டியது

லீக் கிண்ணம்: டெர்பியிடம் தோற்று மூட்டையை கட்டியது

2 mins read
fe1fb5ae-f6be-4167-b089-31fffe2197f8
-

மான்செஸ்டர் யுனைடெட் ஓல்ட் டிராஃபர்ட்: இஎஃப்எல் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்றில் டெர்பி குழுவிடம் தோற்று மூட்டையைக் கட்டியது மான்செஸ்டர் யுனைடெட். மூன்றாவது நிமிடமே யுவன் மாட்டா போட்ட கோலால் முன் னிலை பெற்றது யுனைடெட். இது கடைசி ஒன்பது மாதங் களில் அவர் போட்ட முதல் கோல். பிற்பாதி நேரம் வரை நீடித்த இந்த முன்னிலையை 59வது நிமிடத்தில் டெர்பி குழுவின் ஹேரி வில்சன் போட்ட கோலால் சமன் கண்டது. இவர் பிரிமியர் லீக்கின் முன்னணி லிவர்பூல் குழுவில் இருந்து கடனாக டெர்பிக்கு வந்தவர். தொடர்ந்து 85வது நிமிடத்தில் மாரியட் பந்தை வலைக்குள் உதைக்க டெர்பி 1=2 என முன்னிலை பெற்றது. இதற்கிடையே, ரொமேரொவின் கையில் பட்டு பந்து சென்றதால் அவருக்கு சிவப்பு அட்டை காண் பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 பேருடன் விளையாடிய மேன்யூ, டெர்பியுடன் சமன் செய்ய போராடியது.

யுனைடெட்டின் இந்தப் போராட்டத்திற்கு காயம் பட்டதற் கான கூடுதல் நேரத்தின்போது பலன் கிடைத்தது. ஃபெலனி தலையால் முட்டி உதைத்த பந்து கோலானதால், சமநிலை கண்டது ஆட்டம். எனவே வெற்றியாளரைத் தீர் மானிக்க பெனால்டி முறை பின் பற்றப்பட்டது. இதில் 8=7 என்ற கணக்கில் தோற்ற யுனைடெட் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. யுனைடெட்டின் ஜோன்ஸ் உதைத்த பந்தை லாவகமாக தடுத்துவிட்டார் டெர்பியின் கோல் காப்பாளர் ஸ்காட் கேர்சன். இதனால், முன்னணி இங் கிலிஷ் காற்பந்துக் குழுவான யுனைடெட் குழுவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது டெர்பி. ஐந்து முறை வெற்றியாளரான யுனைடெட் குழுவை வெளி யேற்றிய மகிழ்ச்சியைக் கொண் டாடினார் டெர்பியின் நிர்வாகி லம்பர்ட். பிரிமியர் லீக் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ள யுனைடெட் லீக் கிண்ணத்தில் இருந்தும் வெளியேறியது அதன் ரசிகர் களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உல்வ்ஸ் குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு யுனைடெட் நிர்வாகி மொரின்யோ குழுவில் பெரும் மாற்றங்களைச் செய்திருந் தார். பால் போக்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், ஆஷ்லே யங் குழுத் தலைவராக செயல்பட்டார்.

பெனால்டி ‌ஷூட்அவுட் முறையின்போது மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பில் ஜோன்ஸ் உதைத்த பந்தை தடுத்து, தன் குழுவை அடுத்த சுற்றுக்கு முன்னேறச் செய்தார் டெர்பியின் கோல் காப்பாளர் ஸ்காட் கேர்சன். படம்: ராய்ட்டர்ஸ்