காற்பந்தில் தடம் பதிக்க விரும்பும் உசேன் போல்ட்

காற்பந்தில் தடம் பதிக்க விரும்பும் உசேன் போல்ட்

1 mins read
9dd017e9-39cb-4ceb-8e29-cd11de5b033b
-

சிட்னி: ஓய்வுபெற்ற ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட், இப்போது தொழில்முறை ரீதியாக காற்பந்து வீரராக அறிமுகம் காணவிருக்கிறார். தாம் ஒரு தலைசிறந்த காற் பந்து வீரராக வேண்டும் என்ற கனவு இவருக்கு சிறு வயதில் இருந்தது. ஓட்டப்பந்தய உலகில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய பிறகு இப்போது தமது சிறு வயது கனவை நனவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க உள்ளார் 32 வயது போல்ட். ஆஸ்திரேலிய காற்பந்து லீக்கில் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் குழுவில் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் தொடக்க வீரராக போல்ட் அறி முகம் காண்பார் என அக்குழுவி ன் பயிற்று விப்பாளர் மைக் மல்வே உறுதி அளித்துள்ளார். "எதிர்வரும் ஆட்டம் எனக்கு முக்கியம் வாய்ந்தது. காற்பந்து உலகில் எனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்த ஆட்டம் ஒரு தொடக்கமாக அமையும்," என்று போல்ட் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் குழுவின் ஆட்டக்காரர் ஒருவருடன் உசேன் போல்ட் (வலது) பொருதுகிறார். படம்: ஏஎஃப்பி