ரூனி: மொரின்யோவை குறைகூறாதீர்; ஆட்டக்காரர்களும் பொறுப்பேற்க வேண்டும்

ரூனி: மொரின்யோவை குறைகூறாதீர்; ஆட்டக்காரர்களும் பொறுப்பேற்க வேண்டும்

2 mins read
163c31a5-8d3f-453a-85ad-9d35f885733c
-

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நடப்பு பருவத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழு வலு வான தொடக்கத்தைப் பெற தவறி யதைத் தொடர்ந்து அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ பல்வேறு விமர்சனங்களுக்கு இலக்காகி உள்ள தாக அந்தக் குழுவின் முன்னாள் தலைவர் வேன் ரூனி கூறியுள்ளார். யுனைடெட் ஆட்டக் காரர்களும் குழுவின் தோல்வி களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நடை பெற்ற லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றதை அடுத்து லீக் பட்டியலில் யுனைடெட் எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இருப்பினும், பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான் செஸ்டர் சிட்டியைவிட ஏழு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது யுனைடெட்.

இப்பருவத்தில் யுனைடெட் முக்கிய ஆட்டங்களை வெல்லத் தவறியுள்ளதால் அக்குழுவில் மொரின்யோவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அவருக்கு அடுத்ததாக நிர்வா கி யாக யார் பதவி வகிப்பார் என்ற ஊகத்தில் ஊடகங்கள் இறங்கிவி ட்டன. இந்நிலையில், தமது முன்னாள் நிர்வாகியான மொரின்யோவிற்கு தமது வலுவான ஆதரவை ரூனி வெளிப்படுத்தியுள்ளார். "யுனைடெட்டில் தற்போது நிலைமை கடினமாகத்தான் உள் ளது," என்றார் யுனைடெட்டின் வரலா ற்றில் ஆக அதிக கோல்களை அடித்தவரான ரூனி. "ஆட்டக்காரர்களுக்கும் நிர் வாகி மொரின்யோவுக்கும் இது சற்று கடினமான தொடக்கமாகத் தான் உள்ளது. அனைத்து விமர்ச னங்களும் மொரின்யோ மீது தான் குவிகின்றன.

ஆனால், ஆட் டக்காரர்களும் இதற்கு பொறுப்பேற்று சிறந்து விளங்க வேண்டும்," என்றார் அவர். எவர்ட்டன் குழுவில் சேர யுனைடெட்டைவிட்டு கடந்த ஆண்டு புறப்பட்ட 32 வயது ரூனி, பின்னர் இவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் மேஜர் காற்பந்து லீக்கின் டிசி யுனைடெட் குழுவில் ஒப்பந்தமானார். யுனைடெட் நிர்வாகியாக முன் ன தாக ஈராண்டுகளுக்கு பொறுப்பு வகித்த லூயி வேன் காலுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது என்று ரூனி நினைவுகூர்ந்தார். "அப்போதும் நான் இதைத்தான் சொன்னேன். நிர்வாகியின் பயிற்று விப்பு முறையை மட்டும் சாடாமல் ஆட்டக்காரர்களும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் சொந்த்த மண்ணான ஓல்ட் டிராஃபட் அரங்கில் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் நிர்வாகி ஜோசே மொரின்யோவுடன் உரையாடும் வேன் ரூனி. ராய்ட்டர்ஸ் கோப்புப் படம்