'ஹாரிஸ் தலைமைத்துவப் பண்புடையவர்'

'ஹாரிஸ் தலைமைத்துவப் பண்புடையவர்'

2 mins read
d60e5089-747a-47d6-98fa-9a802a723c5f
-

சிங்கப்பூர்: உள்ளூர் காற்பந்து துறையில் கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமான இளம் காற்பந்து வீரராக ஹாரிஸ் ஹருன் திகழ் கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. மலேசிய சூப்பர் லீக் காற்பந்துக் கிண்ணம், ஏஎஃப்சி கிண்ண வெற்றி, 2012 ஆசியான் காற்பந்து சம்மேளன (ஏஎஃப்எஃப்) சுஸுகி கிண்ண வெற்றி என பல்வேறு வெற்றிக் கிண்ணங்களை வெல்ல பங்களித்தவராக இவர் உள்ளார். இப்போது நிரந்தரமாக தேசிய லயன்ஸ் குழுத் தலைவராகும் வாழ்நாள் கௌரவத்தைச் சம்பா தித்துள்ளார் ஹாரிஸ்.

முன்னாள் குழுத் தலைவர் களான ஃபாண்டி அஹமது, லிம் தோங் ஹாய், டெர்ரி பத்மநாதன், நஸ்ரி நசிர், ஷரில் இஷாக் போன்ற வர்களின் காலடிச் சுவடுகளை அவர் பின்பற்றுகிறார். "இது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருது கிறேன். ஆனால், தத்தம் குழுக்களு க் காக தலைவர் பொறுப்பை ஏற்ற தலைசிறந்த ஆட்டக்காரர்கள் பலர் நம்மிடையே உள்ளனர்," என்றார் மலேசியாவின் ஜோகூர் டாருல் டக்ஸிம் குழுவில் மத்தியத் திடல் ஆட்டக்காரராக விளையாடி வரும் ஹாரிஸ். நைக்கி நிறுவனம் தயாரித்து உள்ள லயன்ஸ் குழுவின் புதிய வடிவிலான சீருடையை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் இவர் நேற்று முன்தினம் கலந்துகொ ண்டார். அடுத்த மாதம் 19ஆம் தேதி 28 வயதாகவிருக்கும் ஹாரிஸ், இத்தனைக்கும் லயன்ஸ் குழுவின் ஆக வயதான அல்லது ஆக அதிக அனுபவமிக்க ஆட்டக் காரரோ கிடையாது. தமக்கும் குழுவின் மூத்த ஆட்டக்காரர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதாக இவர் கூறுகிறார்.

லயன்ஸ் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஹாரிஸ் ஹருன், நேற்று முன்தினம் காலாங் வேவ் கடைத்தொகுதியில் அக்குழுவின் புதிய வடிவிலான சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமக்கு வழங்கப்பட்டுள்ள தலைவர் பொறுப்பை கௌரவமானதாக இவர் கருதுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்