துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்பது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி இறுதி வரை போராடி தோல்வியின் பிடியில் இருந்து மீண்டது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482 ஓட்டங்களை எடுக்க, ஆஸ்திரேலியா 202 ஓட்டங்களில் சுருண்டது. ஆனாலும், 'ஃபாலோ ஆன்' கொடுக்காமல் மீண்டும் பந்தடித்த பாகிஸ்தான் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதை அடுத்து, 462 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸி. அணிக்கு இம்முறையும் ஆரோன் ஃபிஞ்ச் = உஸ்மான் கவாஜா இணை அபாரத் தொடக்கம் தந்தது. இறுதியில் அந்த அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை 'டிரா'வில் முடித்தது. (படத்தில்) 141 ஓட்டங்களை விளாசிய ஆஸி. வீரர் கவாஜா. படம்: ஏஎஃப்பி
போராடி தோல்வியைத் தவிர்த்த ஆஸ்திரேலியா
1 mins read
-

