மாற்றமின்றி களமிறங்கும் இந்தியா

மாற்றமின்றி களமிறங்கும் இந்தியா

1 mins read

ஹைதராபாத்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் எட்டாமிடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ஹைத ராபாத்தில் நடக்கும் இரண்டாவது போட்டியில் மோதவிருக்கின்றன. ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் படுதோல்வி காணச் செய்தது. அதே செயல்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தி, தொடரை 2=0 எனும் வெல்லும் முனைப்பில் இருக்கும் இந்திய அணி, அதற்கு அச்சாரமாக முதல் போட்டியில் ஆடிய அணியே இன்றும் களம் இறங்கும் என அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கி லாந்து என வெளிநாடுகளில் நடந்த இரு டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந் தித்த இந்திய அணி, சொந்த நாட்டில் வெற்றிப் பாதைக்குத் திரும்பியதில் வியப்பேதுமில்லை.

அணித் தலைவர் விராத் கோஹ்லியின் 24வது சதம், 18 வயதே ஆனாலும் பயமின்றி விளையாடி சதமடித்த பிருத்வி ஷா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர் களின் அற்புதமான செயல்பாடு = இவையெல்லாம் முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கான முக்கிய காரணங்கள். இந்த நிலையில், முதல் போட்டி யில் விளையாடாத வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச்சும் இன்று களம்காண்கின்றனர். ஆனாலும், ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விளையாட்டரங்கில் எதிரணிகள் ஓட்டம் குவித்ததாக வரலாறு இல்லை.