பாலியல் புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்

1 mins read

புதுடெல்லி: கவிப்பேரரசு வைர முத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கும் பாடகி சின்மயி, பாலியல் தொல்லை கொடுத்த பல பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்காவும் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஆடிய போது மும்பை ஹோட்டலில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெண் ஒருவர் வெளியிட்ட பதிவை சின்மயி பகிர்ந்துகொண்டுள்ளார். 'ஹோட்டலில் என் தோழி ஒருவரைத் தேடியபோது அவர் தன் அறையில் இருப்பதாக மலிங்கா என்னிடம் கூறினார். அதைக் கேட்டு அவரது அறைக்குள் புகுந்த என்னிடம் அவர் அத்துமீற முயன்றார். நல்ல வேளையாக ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்ட, நான் தப்பிவிட்டேன்," என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.