காற்பந்தில் சூதாட்டம்: பெல்ஜிய முகவரிடம் தீவிர விசாரணை

காற்பந்தில் சூதாட்டம்: பெல்ஜிய முகவரிடம் தீவிர விசாரணை

1 mins read

பிரசல்ஸ்: சூதாட்டத்திலும் நிதி முறைகேட்டிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பெல்ஜிய நாட்டின் ஆக செல்வாக்குமிக்க காற்பந்து முகவர் மோகி பயாத் உட்பட பல முக்கியப் புள்ளிகளை அந்நாட்டு போலிசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில், மோகி பயாத்திடம் நேற்று போலிசார் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜிய லீக்கில் சூதாட்டம் இடம்பெற்றதாகப் பரவலாகப் பேசப்படும் நிலையில் அந்நாட்டு போலிசார் அங்குள்ள 44 காற்பந்துக் குழுக்களிலும் பலரது வீடுகளிலும் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அத்துடன், பிரான்ஸ், சைப்ரஸ், மோன்டனக்ரோ, லக்சம்பர்க், செர்பியா, மேசிடோனியா ஆகிய நாடுகளிலும் 13 இடங்களில் சோதனை இடம்பெற்றது.