ரஷ்யா மீதான தடை: டிசம்பரில் முடிவு

ரஷ்யா மீதான தடை: டிசம்பரில் முடிவு

1 mins read

பியூனஸ் அய்ரஸ்: அனைத்துலகத் திடல்தடப் போட்டிகளில் பங்கேற்பதில் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது அல்லது மேலும் நீட்டிப்பது குறித்து டிசம்பர் மாதம் முடிவெடுக்கப்படும் என்று அனைத்துலக திடல்தடக் கூட்டமைப்புகள் சங்கத் (ஐஏஏஎஃப்) தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார். பரந்த அளவில் ஊக்கமருந்தைப் பயன்படுத்திய விவகாரத்தில் ரஷ்ய விளையாட்டு அமைச்சுக்கும் உளவு அமைப்பிற்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 2015ஆம் ஆண்டு முதல் அனைத்துலகத் திடல்தடப் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டாளர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.