டெண்டுல்கரை முந்திய விராத் கோஹ்லி

டெண்டுல்கரை முந்திய விராத் கோஹ்லி

2 mins read

விசாகப்பட்டினம்: அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாத னை பட்டியலில் கிரிக்கெட் ஜாம்ப வான் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய இப்போட்டியில் பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. அப்போது 49வது அரைசதத்தை விளாசிய விராத் கோஹ்லி, தொடர்ந்து 81 ஓட்டங்களைக் கடந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேக மாக 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையையும் எட்டினார்.

சச்சின் டெண்டுல்கருக்கு இச் சாதனையை எட்ட 259 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் கோஹ்லி 205 இன்னிங்சில் இந்தச் சாத னையை நிகழ்த்தி உள்ளார். 11 ஆண்டு 103 நாட்களில் எட்டிய சச்சின் செய்த இச்சாத னையை விராத் கோஹ்லி 10 ஆண்டு 64 நாட்களில் முறி யடித்துள்ளார். கங்குலி 263 இன்னிங்சிலும் பாண்டிங் 266 இன்னிங்சிலும் கல்லீஸ் 272 இன்னிங்சிலும் டோனி 273 இன்னிங்சிலும் லாரா 278 இன்னிங்சிலும் வேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ள னர். இதுதவிர வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட் டிகளில் அதிக ஓட்டங்கள் அடித் தவராகவும் திகழ்கிறார் விராத் கோஹ்லி.

மேலும் நேற்றைய போட்டியில் கோஹ்லி 129 பந்தில் 157 ஓட் டங்கள் விளாசி ஆட்டமிழக்காம லும் இருந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 322 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. முன்னதாக இந்திய அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ‌ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர் களாக களம் இறங்கினார்கள்.