வெஸ்ட் இண்டீசுக்கு பின்னடைவு

1 mins read

புதுடெல்லி: இந்தியாவுடனான டி=20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்=ரவுண்டர் ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அந்த அணி அறி வித்துள்ளது. காயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் ஒருநாள் தொடரில் சேர்க் கப்படவில்லை. டி=20 தொடருக் கான அணியில் அவர் இடம்பெற் றிருந்தார். காயம் குணமடையாத தால் தற்போது டி=20 தொடரிலும் இருந்து விலகுகிறார். கிறிஸ் கெயில், சுனில் நரைன் உள்ளிட்ட அனுபவ வீரர் கள் இல்லை. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷ்லே நர்சும் விலகியுள்ளார். தற்போது ரசலும் விலகியிருப் பது வெஸ்ட்இண்டீஸ் அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப் படுகிறது.