புதுடெல்லி: இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் பந்தடிப்புச் சாதனைகள், தலைமைத்துவம், அர்ப்பணிப்பு ஆகியவை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாராவிடமிருந்து ஒரு அரிய பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது. அண்மையில் விராத் கோஹ்லி குறித்து பிரையன் லாரா கூறுகை யில், "கிரிக்கெட் ஆட்டத்துக்கு தற்போது ஒரு தலைவர் கிடைத்துள்ளார். இன்றைய கிரிக்கெட்டில் விராத் கோஹ்லி எது செய்தாலும் அது பெரும் சாதனையாகவே உள்ளது. "அவரது ஓட்ட குவிப்பு, உடல்தகுதி, மேலும் பல்வேறு விஷயங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவை ஆட்டத்துக்கு ஒரு பெரும் தலைவரை வழங்கியுள்ளதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. "என்னையும் சச்சினையும் பற்றி நிறைய செய்திகள் ஒப்பிட்டு எழுதப்பட்டன. ஆனால் எங்க ளுக்கு இது அவ்வளவு முக்கிய மானதல்ல. "கோஹ்லியும் இத்தகைய ஒப் பீடுகள் உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் என்றே கருதுகிறேன்.
"ஒப்பீடுகள் தவறானவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் வளர்ச்சியடைந்தவர்கள். ஆனால் ஒவ் வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் செய்யும் சாதனை யும் தனித்துவம் வாய்ந்தது தான். ஒப்பீடு அவசியமில் லாதது," என்றார் பிரையன் லாரா.

