ஹனோய்: உலகின் அதிவேக ஃபார்முலா ஒன் கார் பந்த யத்தை நடத்தும் நாடுகளில் வியட்நாமும் இணையவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் 2020ஆம் ஆண்டு முதல் எஃப்1 பந்தயம் நடை பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கென சிறப்புப் பந்தயத் தடம் அமைக் கப்படாமல் சிங்கப்பூரைப் போல சாலையிலேயே நடைபெறும். பந்தயச் சுற்றின் நீளம் 5.565 கிலோமீட்டராக இருக்கும். முதல் பந்தயம் 2020 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும்.
2020 முதல் வியட்நாமில் எஃப்1
1 mins read

