எதிரணி அரங்கில் லிவர்பூல் ஏமாற்றம் பெல்கிரேட்: நடப்பு இங்கிலிஷ் லீக்

1 mins read
7e7348a3-9244-4afb-a8d0-ab50c5f9dab8
-

பருவத்தில் இன்னும் தோல்வியே காணாத லிவர்பூல் காற்பந்துக் குழு, அதிகம் அறியப்படாத செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல் கிரேட் குழுவிடம் சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் ஒன்றில் 2=0 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சி அளித்தது. சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் எதிரணி அரங்குகளில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்று இருப்பது இதுவே முதன்முறை. 'சி' பிரிவில் நேப்போலி குழு வைப் போல ஆறு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் முன்னதாக அக் குழுவிடமும் தோற்றதால் லிவர்பூல் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

அண்மைக்காலமாக லிவர்பூல் குழுவினரிடம் தென்பட்ட மாய வித்தைகள் நேற்றைய ஆட்டத்தில் காணாமல் போய்விட்டதாகக் குறிப் பிட்டார் அதன் நிர்வாகி யர்கன் கிளோப். ஆட்டத்தின் 22ஆம் நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்த ரெட் ஸ்டார் வீரர் மிலான் பாவ்கோவ், அடுத்த ஏழாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலைப் போட்டு தமது குழுவின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

ஹேரி கேனின் (நடுவில்) இந்த கோல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் 78வது, 89வது நிமிடங்களில் இவர் போட்ட இரு கோல்களால் ஸ்பர்ஸ் குழுவின் சாம்பியன்ஸ் லீக் பயணம் நீடிக்கிறது. படம்: ஏஎஃப்பி