மலேசியா வெற்றித் தொடக்கம்

1 mins read

நோம்பென்: ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நேற்று தொடங்கின. கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடந்த 'ஏ' பிரிவு ஆட் டத்தில் மலேசியாவும் கம்போடியாவும் மோதின. ஆட்டத்தின் 30வது நிமி டத்தில் கோல் கட்டத்தின் மையப் பகுதியில் இருந்து மலேசிய ஆட்டக் காரர் நோர்ஷாருல் இத்லான் தலாகா தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளி கோலாக்கினார். அதன்பின் இரண்டு அணிகளும் பலவாறு முயன்றும் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் 1=0 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. நேற்றிரவு நடந்த இன்னோர் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் வியட்நாமும் லாவோசும் மோதின.