'அணியின் நலனே முக்கியம்'

'அணியின் நலனே முக்கியம்'

1 mins read

எந்த ஒரு முக்கியக் காற்பந்துத் தொடரிலும் அதிக கோல்களை அடித்து தங்கக் காலணி விருதை வெல்லவேண்டும் என்பதே ஒவ் வொரு தாக்குதல் ஆட்டக்காரரின் கனவாக இருக்கும். ஆனால், ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணத் தில் அறிமுக வீரராக களமிறங்க காத்திருக்கும் சிங்கப்பூரின் இளம் தாக்குதல் வீரரான இக்ஷான் ஃபாண்டியோ, தங்கக் காலணிக்கு முக்கியத்துவம் தராமல் அணியின் வெற்றிக்கே முன்னுரிமை அளிப் பேன் எனக் கூறுகிறார். கம்போடியா, மங்கோலியா, ஃபிஜி, மொரீ‌ஷியஸ் ஆகிய அணி களுக்கு எதிரான நட்புரீதியிலான அனைத்துலக ஆட்டங்களில் மூன்று கோல்களை அடித்து அசத் தினார் 19 வயதான ஃபாண்டி. இதனால் சுசுகி கிண்ணத்திலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. இருந்தாலும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் சாதிக் கும் முனைப்போடு களமிறங்க இருப்பதாக இக்ஷான் கூறினார்.