ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப் பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 2020ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கவிருக் கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராவதற்காக சிங்கப்பூருக்குத் திரும்பவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்துடன் அமெரிக்காவின் டெக்சஸ் பல் கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடிக்கிறார் 23 வயதான ஸ்கூலிங், அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "பட்டப் படிப்பை முடித்த பிறகு ஒரு சில வாரங்கள் அமெரிக்கா விலேயே தங்கி நல்ல பயிற்சி பெற விரும்புகிறேன். இப்போதைக்கு முதுகலைப் படிப்பில் சேரும் எண்ணம் இல்லை. ஒருவேளை நீச்சலில் இன்னும் சாதித்த பிறகு படிக்க வாய்ப்புண்டு. அப்படி முதுகலைப் படிப்பில் சேராத பட் சத்தில் சிங்கப்பூருக்குத் திரும்பி 'ஊகிக்கக்கூடிய எதிர்காலத்திற் காக' பயிற்சியில் ஈடுபட வேண் டியது அவசியம்," என்று 'ஸ்விம் ஸ்வேம்' எனும் இணையத்தளத் திற்கு அளித்த நேர்காணலின் போது ஸ்கூலிங் கூறினார்.
2020 ஒலிம்பிக்கிற்கு ஆயத்தமாகும் ஸ்கூலிங்
1 mins read

